அனில் அம்பானிக்காகவே புதிய ரஃபேல் ஒப்பந்தம் - ராகுல் காந்தி

Webdunia
புதன், 30 ஜனவரி 2019 (14:03 IST)
பாராளுமன்றக் கூட்டத்தொடரிலும் சரி, நாட்டிலும் சரி, தேசிய - மாநில அரசியலிலும் சரி தற்போது பூதாகரமாகி மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசினை ஆட்டம் காண வைத்திருக்கிறது ரஃபேல் ஒப்பந்தம். 
இந்நிலையில் ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் கட்சி வரிந்து கட்டிக்கொண்டு பாஜவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தது. 
 
இந்நிலையில் இது பற்றி ராகுல் காந்தி கூறியதாவது:
 
அனில் அம்பானி ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காகவே பிரதமர் மோடி புதிய ரஃபேல் ஒப்பந்தத்தை உருவாக்கிதாகவும் இதில் மனோகர் பாரிகார் எதுவும் செய்யவில்லை என தெரியவந்திருப்பதாகவும் ராகுல் கூறினார்.
 
மேலும் ரஃபேல் ஒப்பந்தத்தில் தாம்  ஈடுபடவில்லை என மனோகர் பார்க்கர் தன்னிடம் தெரிவித்ததாகவும் ராகுல் காந்தி கூறினார். இந்த ஒப்பந்தம் முழுக்க முழுக்க அனில் அம்பானியின் ஆதாயத்துக்காகவே உருவாக்கப்பட்டது என்று ராகுல் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்