ஆந்திர ரயில் விபத்து: 18 ரயில்கள் ரத்து.. 22 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்..!

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2023 (08:52 IST)
ஆந்திர ரயில் விபத்தால் இதுவரை 18 ரயில்கள் முழுமையான ரத்து செய்யப்பட்டதாகவும், 22 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திரா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் நிறைவு அடைந்ததாகவும், ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தி, இருப்புப்பாதையை சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் மீட்புப் பணிகள் நிறைவுற்ற நிலையில், இன்று மாலைக்குள் இருப்புப்பாதை சீராகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர   ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ள நிலையில் 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி மற்றும் தகவல் தெரிவிக்கும் வகையில், விஜயநகரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 94935 89157 என்ற உதவி எண் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் 89780 80006 என்ற ரயில்வே உதவி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்