ஆந்திரா: ஸ்ரீ நவமி கொண்டாட்டத்தில் கோவிலில் தீ விபத்து

Webdunia
வியாழன், 30 மார்ச் 2023 (16:35 IST)
ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீ நவமி கொண்டாட்டத்தின்போது, கோவிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
 
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் தனகு என்ற பகுதியில் உள்ள வேணுகோபால் சுவாமி கோவியில் ஸ்ரீ நவமி விழா   கோலாகலமாகக் கொண்டாட்டப்பட்டு வந்தது.

அப்போது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அமைக்கப்பட்ட பந்தல்கள் மீது பட்டாசுகள் விழுந்து திடீரென்று பந்தலில்  தீப்பிடித்து, பெரும் விபத்து ஏற்பட்டது.இதனால், பக்தர்கள் தீயிலிருந்து தப்பிக்க வேண்டி, அங்கிருந்து  ஓட்டினர்.

இதுபற்றி, தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், தீயை அணைத்தனர்.

இந்தச் சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்