சேவல் சண்டையை வேடிக்கை பார்த்த 95 பேர்களை ஜெயிலுக்கு அனுப்பிய நீதிமன்றம்

Webdunia
வியாழன், 1 பிப்ரவரி 2018 (23:40 IST)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டை போலவே ஆந்திராவில் சேவல்சண்டை புகழ்பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் சங்கராந்தி திருவிழாவின் போது அம்மாநிலத்தின் பட்டிதொட்டியெங்கும் சேவல் சண்டை நடப்பது வழக்கம். ஆனால் சமீபத்தில் சேவல்சண்டைக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் தடைவிதித்தது.

இந்த நிலையில் இந்த ஆண்டும் ஆந்திர மாநிலத்தில் உள்ள பல நகரங்களில் சேவல்சண்டை நீதிமன்ற தடையையும் மீறி நடந்தது. இதனால் ஆந்திர அரசு மீது கடும் அதிருப்தி தெரிவித்த ஆந்திர நீதிமன்றம் சேவல்சண்டையை வேடிக்கை பார்த்தவர்களை கைது செய்து அவர்களை மூன்று நாட்கள் சிறையில் வைக்க உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி இதுவரை 95 பேர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இன்னும் பலர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்