மும்மொழி மட்டுமல்ல, 10 மொழிகளை மாணவர்களுக்கு ஊக்குவிப்பேன்: சந்திரபாபு நாயுடு..!

Mahendran

வியாழன், 6 மார்ச் 2025 (10:05 IST)
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இருமொழி கொள்கை மட்டுமே தமிழகத்தில் அமல்படுத்தப்படும் என்றும், மும்மொழிக்கு இடமே இல்லை என்றும் கூறிவரும் நிலையில், அண்டை மாநிலமான ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மும்மொழி மட்டுமல்ல, 10 மொழிகளைப் படிக்கக்கூட மாணவர்களை ஊக்குவிப்பேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இது குறித்து அவர் கூறிய போது, "மொழி என்பது தகவல் தொடர்பு மட்டுமே; மொழி வேறு, அறிவு வேறு. உலக அளவில் தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகள் ஒளிர்வதை அனைவரும் அறிவீர்கள். பல்கலைக்கழகங்களில் சர்வதேச மொழிகள் உட்பட 10 மொழிகளை ஊக்குவிக்க உள்ளேன். 
 
தெலுங்கு மட்டுமல்ல, பல மொழிகளில் மாணவர்கள் எந்த மொழியையும், எத்தனை மொழியையும் படிக்கலாம். எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை செய்யலாம். உங்கள் சேவை அனைவருக்கும் தேவை. தெலுங்குவைப் பாதுகாக்க வேண்டும். அதேசமயம், ஆங்கில மொழியையும் ஊக்குவிக்க வேண்டும். ஹிந்தி மொழியை கற்றுக் கொள்வது நல்லதே; அதனால் நாம் மக்களிடம் எளிதாக பழக முடியும்," என்று தெரிவித்தார்.
 
தமிழகத்தில் ஹிந்தி எதிர்ப்பு கொள்கை கடந்த 50 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், அண்டை மாநிலத்தில் ஹிந்தியை கற்றுக் கொள்ளலாம் என்று ஆந்திர முதல்வர் கூறியிருப்பது விவாதத்திற்குரிய நிலையை உருவாக்கியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்