''6 பேர் அமரும் பேட்டரி வாகனம் ''உருவாக்கிய இளைஞரை பாராட்டிய ஆனந்த் மகிந்த்ரா

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2022 (18:59 IST)
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா 6 பேர் அமரும் வகையில் இருசக்கர வாகனம் கண்டுபிடித்துள்ள இளைஞர்களை பாராட்டியுள்ளார்.

இந்தியாவில் உள்ள முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்று மஹிந்திரா. இந்த நிறுவனம், கார், ஐடி என பல தொழில்களில் முன்னணியில் உள்ளது.

இந்த நிறுவனத்தின் தலைவர் ஆனத் மகிந்திரா. புதுமை விரும்பி மற்றும் புதிதாகக் கண்டுபிடிப்பவர்களை கண்டறிந்து பாராட்டும் பண்புடையவர்.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், தன் டுவிட்டர் பக்கத்தில், 6 பேர் அமரும் வகையில், ஒரு இருசக்கர வாகனத்தை உருவாக்கிய இளைஞரின் கண்டுப்பிடிப்பு மற்றும் திறமையை பாராட்டியுள்ளார்.
 

ALSO READ: ஒரே ஒரு கார்ட்டூனை பார்த்ததும் செல்போனை தூக்கி எறிந்த ஆனந்த் மஹிந்திரா!
 
மேலும், இது கிராமங்களின் சிறந்த போக்குவரத்து வசதி என்றும் எங்கு தேவயுள்ளதோ அங்கு தேவை கண்டுபிடிப்புகளின் தாய் என்று குறிப்பிட்டு, வீடியோவை பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்