என்ஜினீயரை கடத்திச் சென்று கட்டாயாத் திருமணம் - பெண் வீட்டார் கைது

Webdunia
புதன், 18 ஜூலை 2018 (12:45 IST)
பீகாரில் திருமணத்திற்கு மறுத்த என்ஜினீயரை, பெண் வீட்டார் கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் ஆண்களை கடத்தி கட்டாயத் திருமணம் செய்து வைக்கும் அவலம் தொடர் கதையாகி வருகிறது. 2014 ஆம் ஆண்டில் 2526 ஆண்களும், 2015ல் 3000 ஆண்களும், 2016ல் 3070 ஆண்களும், 2017ல் 3400 ஆண்களும் கடத்தப்பட்டு கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார்கள். வருடத்திற்கு வருடம் இந்த சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
 
பீகார் மாநிலம் வைஷாலி  மாவட்டத்தை சேர்ந்த துர்கேஷ் சரண் என்ற நபர் இந்திய ரயில்வேயில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவரும் பிரியங்கா குமாரி என்ற பெண்ணும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்தனர்.
 
சமீபத்தில் பிரியங்கா பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர் என சரணுக்கு தெரியவந்தது. இதனால் சரண் பிரியங்காவுடன் பழகுவதை நிறுத்தி விட்டார்.
 
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் வீட்டார், சரண் பணிமுடிந்து வீட்டிற்கு திரும்பிய போது, அவரை துப்பாக்கி முனையில் கடத்தி, பிரியங்காவிற்கு கட்டாய திருமணம் செய்யப் பார்த்தனர். இந்த விஷயம் சரணின் பெற்றோருக்கு தெரியவர அவர்கள் போலீஸாரிடம் புகார் அளித்தனர்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சரணை மீட்டனர். பெண் வீட்டார் 5 பேரை கைது செய்த போலீஸார், அவர்கள் மீது ஆள் கடத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்