ஒரு மாநிலத்தில் மெஜாரிட்டி இல்லை என்றாலும் அரசியல் கட்சிகளை உடைத்து ஆட்சி அமைப்பதில் கில்லாடி என்ற பெயர் பெற்றவர் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா. அவருடைய சாணக்கியத்தனத்தால்தான் கர்நாடகா, கோவா, மணிப்பூர் உள்பட ஒருசில மாநிலங்களில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது
மற்ற மாநிலங்களில் கூட்டணியில் உள்ள கட்சிகள் பாஜகவிற்கு ஒத்துழைப்பு தந்தது. எனவே எதிர்க்கட்சிகளை மட்டுமே உடைக்க வேண்டிய வேலை அமித்ஷாவுக்கு இருந்தது. ஆனால் மகாராஷ்டிராவை பொறுத்தவரையில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனாவே பிரச்சனை செய்ததால் கூட்டணி கட்சியையும் சமாளித்து எதிர் கட்சிகளையும் உடைக்க வேண்டிய இரட்டை வேலை அமித்ஷாவுக்கு இருந்தது
கர்நாடகத்தில் எதிர்க்கட்சிகளை ஆட்சி செய்ய வைத்து ஆறு மாதங்கள் வரை பொறுமை காத்து அதன் பின் திடீரென அந்த ஆட்சியை கவிழ்த்து பாரதிய ஜனதா ஆட்சி அமைத்ததுபோல் மகாராஷ்டிர மாநிலத்தில் அமித்ஷா பொறுமை காத்து இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அவசரப்பட்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடனே உடைத்தது தவறு என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்