தோல்வியில் முடிந்த அமித் ஷாவின் ஐடியா... நாளை மகாராஷ்டிராவின் முதல்வர் யார் ?
செவ்வாய், 26 நவம்பர் 2019 (17:56 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அதில், பாஜகவுக்கு(105 எம்.எல்.ஏக்கள்), சிவசேனாவுக்கு (56 எம்.எல்.ஏக்கள்), தேசியவாத காங்கிரஸ்வுக்கு (54 எம்.எல்.ஏக்கள்),காங்கிரஸுக்கு (44 எம்.எல்.ஏக்கள்) உள்ளிட்ட எந்தக் கட்சிகளுக்கும் பெரும்பான்மை ஏற்படாமல் தொங்கு சட்டசபையாக இருந்ததால், மாநிலத்தில் யார் ஆட்சி அமைப்பது என்பது குறித்து பெரிதும் போட்டி எழுந்தது.
மத்தியில் ஆளும் பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷாவின் ஆலோசனையின் பேரில், எப்படியும் சிவசேனாவிடம் சமரசம் பேசி, அவர்களின் கூட்டணியுடன் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஷை மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக்க வேண்டுமென திட்டம் தீட்டியதாக தெரிகிறது.
ஆனால் ஆட்சியில் பங்கு வேண்டுமென சிவசேனா முரண்டு பிடிக்கவே பாஜக வெகுண்டது. பின் தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியை பிடிக்க பாஜக தூண்டிப் போட்டது. ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை.
பின்னர்,சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வந்த நிலையில், யாரும் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என அங்கு ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தப்பட்டது.
இதையடுத்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சித் தலைவர்களும் சுமூகமாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். அதில், மூன்று கட்சிகளும் இணைந்து செயல்பட உள்ளதாகவும், சிவசேனா கட்சித் தலைவர், உத்தவ் தாக்கரேவை முதல்வராக்க திட்டமிட்டுள்ளதாகவும், இம்மூன்று கட்சித் தலைவர்களும் மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
அந்த இரவிலேயே தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரின் நம்பிக்கைக்குரியவராக இருந்த அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தனது 54 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன், பாஜக தங்களது ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்தனர். இதையடுத்து தேவேந்திர பட்னாவிஸ் மற்றும், அஜித் பவாரை ஆட்சி அமைக்க வரும்படி கடந்த 22 ஆம் தேதி, ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
ஒரு இரவுக்குள் ஒரு மாபெரும் ராஜ தந்திரத்தையே, அமித் ஷா தலைமையிலான பாஜக அரங்கேற்றியுள்ளதாக நாட்டில் பெரிதும் பேசப்பட்டது.
அடுத்து தேவேந்திர பட்னாவிஸ்ஸும் பாஜக(105 எம்.எல்.ஏக்கள் ), ,அஜித்பவாரும் (54 எம்.எல்.ஏக்கள் ) தங்கள் ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் , தனது உறவினரும் கூட இருந்து தனக்குத் துரோகம் இழைத்த துணை முதல்வர் அஜித்பவாரை கட்சியை விட்டு நீக்கினார்.
இதனையடுத்து, நேற்று, ஒரு மும்பையில் உள்ள ஒரு பெரிய ஹோட்டலில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவவாத காங்கிரஸ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் ஆகிய மொத்தம்’ 162 எம்.எல்.ஏக்கள் ’இணைந்து ஆட்சி அமைக்க தங்களின் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், மஹாராஷ்டிரா முதல்வராகப் பொறுப்பேற்ற பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், மற்றும் துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவார் தங்களின் பதவியை ராஜினாமா செய்து உள்ளனர்.
அதாவது, நாளை சட்டமன்றத்தில் பாஜக மற்றும் அஜித் பவாரின் ஆதரவு எம்.எல்.ஏக்களினால் ஒருவேளை பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போகும் என்ற நிலை உருவாகும் நிலையில் தான் அவர்கள் இருவரும் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளதாககவும் தகவல்கள் வெளியாகிறது.
தற்போது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியினர் நாளை தங்களது 162 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைப் பிடிப்பரா? இல்லை, இன்று இரவுக்குள் எதவாது ’குதிரை பேரம் ’நடத்து நாளையும் இதேபோல் அரசியல் குழப்பம் நீடிக்குமா என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவின் முக்கியமான மாநிலமான மகாராஷ்டிராவில் தங்கள் வெற்றிக்கொடியை ஆட்சி அதிகாரத்துடன் பறக்கவிட பல சாணக்கிய திட்டங்களை வகுத்த பிரதமர் மோடி, மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் ராஜதந்திர முயற்சிக்கு இது ஒரு பெரும் தோல்வியாகவே கருதப்படுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ், சிவசேனா, தே.,காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணிக் கட்சி சார்பில் எம்.எல்.ஏக்கள் நாளை இவர்களின் பதவியேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
எனவே நாளை காலை 8 மணிக்கு கூடும் மகாராஷ்டிரா சட்டசபையில் எம்.எல்.ஏக்களுக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.