கருணாநிதி நினைவேந்தலில் அமித்ஷா கலந்து கொள்ளவில்லை: திடீர் மாற்றம் ஏன்?

Webdunia
வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (21:35 IST)
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பல்வேறு தேசிய தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ள நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவும் கலந்து கொள்ளவிருப்பதாக வெளிவந்த செய்திகள் தமிழக அரசியலில் திடீர் குழப்பத்தை ஏற்படுத்தியது.
 
அமித்ஷா இந்த நினைவேந்தலில் கலந்து கொள்ளவிருப்பதால் பாஜக-திமுக கூட்டணி ஏற்படும் என அரசியல் வட்டாரங்கள் கூறின. இந்த நிலையில் கருணாநிதி நினைவேந்தலில் அமித்ஷா கலந்துகொள்ள போவதில்லை என முடிவெடுத்திருப்பதாக சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அமித்ஷா இந்த நினைவேந்தலில் பங்கேற்பது கூட்டணி சமன்பாடுகளையே மாற்றி அமைக்கும் என பேசப்பட்டு வந்த நிலையில் சுப்பிரமணியசாமியின் இந்த கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
எனவே கடந்த சில மணி நேரங்களாக மிக வேகமாக பரவி வந்த திமுக-பாஜக கூட்டணி குறித்த செய்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டதாக இதன்மூலம் தெரிய வருகிறது. இருப்பினும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது என்று கூற இயலாது என்றும் அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்