உலகின் இரண்டாவது பொருளாதார நாடாக மாறும் இந்தியா! - அமெரிக்கா வயித்தெரிச்சலுக்கு இதுதான் காரணமா?

Prasanth K

வியாழன், 28 ஆகஸ்ட் 2025 (13:51 IST)

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மதிப்பிட்டுள்ள EY இந்தியா 2038ம் ஆண்டில் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என கணித்துள்ளது.

 

உலக மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா தொடர்ந்து உள்நாட்டு தொழில்களின் பெருக்கம், அந்நிய முதலீடுகள் என பல வகைகளில் பொருளாதாரத்தை பெருக்கியுள்ள நிலையில் சமீபத்தில் உலக பொருளாதாரத்தில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி GDP மதிப்பில் புதிய உச்சத்தை தொட்டது. இந்நிலையில் இந்தியா இதே அளவிலான பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்தால் 2038ல் உலக அளவில் இரண்டாவது பொருளாதார நாடாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

2030ல் இந்தியாவின் GDP (PPP அடிப்படையில்) 20.7 டிரில்லியன் டாலருக்கு மற்றும் 2038ஆம் ஆண்டில் 34.2 டிரில்லியன் டாலருக்கு ஆகலாம் எனவும் கணிக்கப்படுகிறது. சீனாவும், அமெரிக்காவும் முன்னிலை வகிப்பினும், இந்தியாவின் இளம் மக்கள் தொகை, அதிக சேமிப்பு மற்றும் முதலீட்டு விகிதங்கள், வேளாண்மை, தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை இந்தியாவின் வளர்ச்சி பாதையை உறுதி செய்கின்றன. அமெரிக்கா விதிக்கும் உயர் இறக்குமதி வரிகள் இந்தியாவின் GDP-யில் 0.9% வரையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றாலும், ஏற்றுமதி மாற்ற விகிதம், உள்நாட்டு தேவை ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக கூட்டணிகள் மூலமாக அதன் தாக்கத்தை 0.1% இந்தியா மட்டுப்படுத்த முடியும் என அறிக்கை கூறுகிறது

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்