அமேசான் நிறுவனம் 2வது கிழக்கிந்திய கம்பெனி: ஆர்.எஸ்.எஸ்.

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (09:30 IST)
இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி சுரண்டி சென்றது போல் இந்தியாவில் சுரண்ட வந்து உள்ள இரண்டாவது கிழக்கிந்திய கம்பெனி அமேசான் என ஆர்எஸ்எஸ் தனது பத்திரிகையில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அமேசான் நிறுவனம் இந்தியாவில் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது என்பதும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் நம்பர் ஒன் அமேசான் நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அமேசான் நிறுவனத்தின் வியாபார விரிவாக்கத்திற்கு ஆர்எஸ்எஸ் நிறுவனம்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 18ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் தங்கள் காலடியில் கீழ் கொண்டுவர கிழக்கிந்திய கம்பெனி என்ன செய்ததோ அதே தான் தற்போது அமேசான் செய்து வருகிறது என்றும் இந்தியாவின் சந்தையை ஏகபோக உரிமையாக அமேசான் முயற்சிக்கிறது என்றும் இந்திய குடிமக்கள் பொருளாதார அரசியல் சுதந்திரத்தை அமேசான் நிறுவனம் பறித்து வருகிறது என்றும் கடுமையாக அந்த பத்திரிகையில் எழுதப்பட்டுள்ளது
 
அமேசான் ஆன்லைன் தளத்தில் இந்திய பண்பாட்டுக்கு எதிரான திரைப்படங்கள் மற்றும் சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருவதாகவும் தங்களுக்கு சாதகமான அரசின் கொள்கைகளுக்காக அமேசான் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து வருவதாகவும் அந்த கட்டுரை சுட்டிக்காட்டியுள்ளது
 
2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் அமேசான் நிறுவனம் தக்க வைத்துக் கொள்வதற்காக 8451 கோடி ரூபாயை செலவு செய்து உள்ளதாகவும் அந்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்