இந்தியா முழுவதும் நகைக்கடைகள் அடைப்பு: திடீர் போராட்டம்!

திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (09:39 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நகை கடைக்காரர்கள் இன்று திடீர் போராட்டம் செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மத்திய அரசின் இந்திய தர நிர்ணய ஆணையம் சமீபத்தில் அனைத்து நகைக் கடைகளிலும் ஹால்மார்க் முத்திரையை பாதிக்கப்படுவது கட்டாயம் என்று அறிவித்து இருந்தது. இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 256 மாவட்டங்களிலும் உள்ள நகைக் கடைகளில் ஹால்மார்க் கட்டாயம் என்று கூறியதை அடுத்து நகைக்கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்
 
ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்பதை வரவேற்கலாம் என்றாலும் ஒவ்வொரு கடைகளுக்கும் தனி ஹால்மார்க் அடையாள எண் கொண்டு வரவேண்டும் என்று அறிவித்ததை எதிர்த்து நாங்கள் போராட்டம் நடத்துகிறோம் என்று நகைக்கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர் 
இதனையடுத்து இன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை இரண்டரை மணி நேரம் இந்தியா முழுவதும் நகை கடைகள் அடைக்கப்பட்டு போராட்டம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த போராட்டத்திற்கு செவிசாய்க்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிப்போம் என நகை கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
 
புதிய ஹால்மார்க் விதிகளுக்கு எதிரான ஈரோடு, தஞ்சாவூர், நாகர்கோவில் ஆகிய நகரங்களில் கடைகளை அடைத்து தங்க ஆபரண வியாபாரிகள் போராட்டம் செய்து வருகின்றனர். ஹால்மார்க் வழங்க போதிய மையங்கள் இல்லாத நிலையில், நகைகளை விற்க பல நாட்கள் காத்திருக்கும் நிலை ஏற்படும் என கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்