பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டால் போராட்டம்- விக்கிரமராஜா

வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (18:14 IST)
பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என விக்கிரமராஜா பேட்டியளித்துள்ளார்.

தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100 ஐ தாண்டிய நிலையில் கடந்த 13ம் தேதி நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு அன்றைய தினம் நள்ளிரவே அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த விலை குறைப்பின் தாக்கம் குறித்து நேற்று  சட்டசபையில் விளக்கமளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் “பெட்ரோல் விலை குறைக்கப்பட்ட பின்பு ஆகஸ்டு 14 முதல் 17ம் தேதிக்கு சுமார் 11 லட்சம் லிட்டர் பெட்ரோல் கூடுதலாக விற்பனையாகியுள்ளது. விலை குறைப்பு மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது புள்ளி விவரங்கள் மூலமாக தெரிய வந்துள்ளது” என கூறினார்.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டால் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கங்களின்  பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்