இந்திய தலைவர்கள் அனைவரும் தாக்குதல் பட்டியலில் உள்ளனர்; அல் கொய்தா மிரட்டல்

Webdunia
செவ்வாய், 27 ஜூன் 2017 (15:31 IST)
இந்திய பாதுகாப்பு படை மற்றும் இந்து மத பிரிவினைவாதிகள் அமைப்பின் தலைவர்கள் என எங்கள் விதிமுறைகளுக்கு எதிராக உள்ள அனைவரும் எங்களின் தாக்குதல் பட்டியலில் உள்ளனர் என அல் கொய்தா பயங்கரவாத அமைப்பு தெரிவித்துள்ளது.


 

 
இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்து அல் கொய்தா பயங்கரவாத இயக்கம் ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் துணைக்கண்டத்தின் மீதான முஜாகிதீன் நடவடிக்கைகள் குறித்து அனைத்து தகவல்கள் உள்ளது. அந்த ஆவணத்தில் அவர்கள் இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
 
இந்திய பாதுகாப்பு படை மற்றும் இந்து மத பிரிவினைவாதிகள் அமைப்பின் தலைவர்கள் என எங்கள் விதிமுறைகளுக்கு எதிராக உள்ள அனைவரும் எங்களின் தாக்குதல் பட்டியலில் உள்ளனர். 
 
எங்கள் காஷ்மீர் சகோதரர்களை கொன்ற ராணுவ அதிகாரிகள் அனைவரையும் பழிவாங்குவோம் என்று தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்