200 ஆண்டுகளாக அட்சய திருதியை கொண்டாடாத கிராமம்

Webdunia
செவ்வாய், 10 மே 2016 (03:57 IST)
இந்தியா முழுவதும் அட்சய திருதியை பொது மக்கள் கொண்டாடிய நிலையில், ஒரு கிராமம் கடந்த 200 ஆண்டுகளாக அட்சய திருதியை முழுவதுமாக புறக்கணித்துள்ளனர்.
 

 
இந்தியா முழுவதம் அட்சய திருதியை முன்னிட்டு நகைக்கடைகளுக்கு சென்று பொது மக்கள் தங்கம் உள்ளிட்ட பல்வேறு நகைகளை வாங்கி திருவிழாக் கோலம் பூண்டது.
 
ஆனால், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தல்பேஹட் என்ற கிராமத்தில் மட்டும் 200 ஆண்டுகளாக அட்சய திருதியை கொண்டாடப்படுவது இல்லை.
 
காரணம், தல்பேஹட் பகுதியை மோர் பிரஹலாத் என்ற மன்னர் ஆட்சி காலத்தில் அட்சய திருதி காலத்தில், சில இளம் பெண்கள் காட்டில் இலை பறித்துக் கொண்டிருக்கும் போது, மன்னரின் ஆட்கள் அவர்களை கடத்திச் சென்று தல்பேஹட் கோட்டையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த காரணத்தினால், இதனை கண்டிக்கும் வகையில், அந்த கிராமத்தில் அட்சய திருதியை கொண்டாடுவதை பொது மக்கள் புறக்கணித்துள்ளனர்.
 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 
அடுத்த கட்டுரையில்