சோனியாவுக்கு நெருக்கமானவரின் மகன் பாஜக இணைப்பு: அதிர்ச்சியில் காங்கிரஸ்..!

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (18:21 IST)
முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மிகவும் நெருக்கமான தலைவரின் மகன் பாஜகவில் இணைந்துள்ளதை அடுத்து பாஜக பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஏகே அந்தோணி என்பதும் இவர் சோனியாவுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறார் என்பதும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி கேரள மாநில முன்னாள் முதல்வராகவும் மத்திய அமைச்சராகவும் இவர் இருந்து உள்ளார். 
 
இந்த நிலையில் ஏகே அந்தோணியின் மகன் அனில் அந்தோணி திடீரென இன்று பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்ததை அடுத்து பாஜகவின் அடிப்படை உறுப்பினர் அட்டையையும் பெற்றுக் கொண்டார். 
 
பிரபல காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரின் மகன் பாஜகவில் இணைந்துள்ளது காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்