இந்தியா - அமெரிக்கா தலைநகரங்கள் இடையே விமான சேவை நிறுத்தம்! - ஏர் இந்தியா அதிர்ச்சி அறிவிப்பு!

Prasanth K

செவ்வாய், 12 ஆகஸ்ட் 2025 (09:07 IST)

இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து அமெரிக்க தலைநகர் வாஷிங்க்டனுக்கு இயக்கப்படும் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

 

இந்தியாவின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்தில் சிக்கியதில், ஒரு பயணி தவிர அனைவரும் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து ஏர் இந்தியா தனது நிறுவன விமானங்களில் பல்வேறு பாதுகாப்பு பரிசோதனைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளது.

 

அதன் ஒருகட்டமாக ஏர் இந்தியா தங்களிடமுள்ள 26 போயிங் ட்ரீம்லைனர் விமானங்களில் மறுசீரமைப்பை மேற்கொள்கிறது. இதனால் இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவை செப்டம்பர் 1ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அமெரிக்காவின் பிற மாகாணங்களான நியூயார்க், சிகாகோ, சான் பிரான்ஸிஸ்கோ உள்ளிட்ட பகுதிகளுக்கும், கனடாவின் வான்கூவர், டோரண்டோ பகுதிகளுக்கும் மற்றும் வட அமெரிக்காவின் 6 பகுதிகளுக்கும் விமானங்கள் இந்தியாவிலிருந்து இயக்கப்படும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்