மீண்டும் ஒரு விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானம் நொறுங்கி விழுந்ததால் அதிர்ச்சி..!

Mahendran

புதன், 9 ஜூலை 2025 (14:05 IST)
கடந்த மாதம் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தின் அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில், தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் ரக போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி நொறுங்கி விழுந்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ராஜஸ்தான் மாநிலம் சுரு என்ற மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கி விழுந்ததாகவும், அதில் பயணம் செய்த விமானி உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
விமானத்தின் சிதைவுகளில் விமானியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், விபத்து நடந்த இடத்தை நோக்கி அந்தப் பகுதி மக்கள் சென்றதாகவும், விபத்து நடந்த இடத்தின் பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
விபத்துக்குள்ளான விமானத்தின் சிதைந்த பாகங்கள் ஆங்காங்கே கிடப்பதாகவும், இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்