சுப்ரீம் கோர்ட் வரலாற்றில் முதல்முறையாக, AI உதவியுடன் வழக்குகள் விசாரணை

செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (20:14 IST)
சுப்ரீம் கோர்ட் வரலாற்றில் முதல் முறையாக AI தொழில்நுட்பத்தின் மூலம் வழக்குகள் விசாரணை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
AI என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு கருவிகள் மூலம் சுப்ரீம் கோர்ட் வரலாற்றில் முதல்முறையாக வழக்கறிஞர்கள் வாதங்களை நேரடியாக பதிவு செய்யும் வசதி இன்று சுப்ரீம் கோர்ட்டில் தொடங்கி வைக்கப்பட்டது. 
 
தற்போதைய டெக்னாலஜி உலகில் AI என்ற செயற்கை நுண்ணறிவு பல துறைகளில் நுழைந்து வருகிறது. அந்த வகையில் இந்த தொழில்நுட்பம் தற்போது சுப்ரீம் கோர்ட் வழக்குகளை விசாரிக்கும் முறைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த AI வசதியை சுப்ரீம் கோர்ட் நீதிபதி சந்திர சூட் அவர்கள் சோதனையின் அடிப்படையில் இன்று தொடங்கி வைத்தார். வழக்கறிஞர்களின் வாய் வழி வாதங்களின் பிரதிநிதிகளை பதிவு செய்வதோடு அதை இணையத்தில் பகிர்ந்து வழக்கறிஞர்களுக்கும் அந்த பதிவு வழங்கப்படும். AI தொழில்நுட்பம் கோர்ட் உள்பட அனைத்து திட்டங்களிலும் நுழையும் என்று கூறப்படுகிறது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்