பேனா நினைவு சின்னத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

புதன், 8 பிப்ரவரி 2023 (11:47 IST)
முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தமிழக அரசு பேனா நினைவுச்சின்னம் வைக்க திட்டமிட்டுள்ள நிலையில் இந்த நினைவு சின்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
சென்னை மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமையுள்ள நிலையில் இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் சற்று முன்னர் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது 
 
சென்னை மெரினாவில் அமையவுள்ள பேனா நினைவுச்சின்ன திட்டத்தை ரத்து செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ஏற்கனவே பேனா நினைவு சின்னத்திற்கு அதிமுக பாஜக உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்