இந்திய விமானப்படையில் வேலை; அக்னிபாத் திட்டம்! – விண்ணப்பிப்பது எப்படி?

வியாழன், 23 மார்ச் 2023 (11:10 IST)
இந்திய ராணுவத்தில் குறுகிய கால பணி வழங்கும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படைக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த அக்னிபாத் குறுகிய கால ராணுவ பணி சேர்ப்பு திட்டத்தில் பல லட்சம் இளைஞர்கள் பணியில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். கடற்படை, விமானப்படை மற்றும் ராணுவம் ஆகியவற்றில் இந்த திட்டத்தின் மூலம் 4 ஆண்டுகால பணி வழங்கப்படுகிறது.

சமீபத்தில் கடற்படை வீரர்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் தற்போது அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படைக்கான ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள இந்திய ராணுவம் இந்த பணிகளுக்காக மார்ச் 31ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளது.

அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர்வதற்கு குறைந்தபட்ச வயது 17.5 ஆண்டுகள். அதிகபட்ச வயது 21 ஆண்டுகள். அதாவது விண்ணப்பிப்பவர்கள் 27.12.2002 முதல் 26.06.2006 வரையிலான காலகட்டத்திற்குள் பிறந்திருக்க வேண்டும்.

மேலதிக விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதள முகவரியில் காண்க.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்