தமிழ்நாட்டில் ’அக்னிவீர்’ ராணுவ ஆட்சேர்ப்பு! – விண்ணப்பிப்பது எப்படி?

செவ்வாய், 7 மார்ச் 2023 (10:00 IST)
இந்திய ராணுவத்தில் குறுகிய கால ராணுவ பணியிடங்கள் வழங்கும் ‘அக்னிவீர்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளது.

இந்திய ராணுவத்தில் 3 ஆண்டுகள் பணி வாய்ப்பை வழங்கும் ‘அக்னிபாத்’ திட்டம் சமீபத்தில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி இந்திய ராணுவத்தின் விமானப்படை, கடற்படை மற்றும் காலாட் படையில் 3 ஆண்டுகள் தற்காலிக பணிகள் வழங்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் பல லட்சம் இளைஞர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில் விரைவில் தமிழ்நாட்டில் அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இதுகுறித்து பேசியுள்ள திருச்சி ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குனர் தீபர் குமார் “அக்னிவீர் திட்டத்திற்கான ஆள்சேர்ப்பு 16 தென் மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்பு இளைஞர்கள் மார்ச் 15ம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.

மேலும் ஆள்சேர்ப்பு நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக உடல்தகுதித்தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்வானவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறும். ஆனால் புதிய முறையின்படி ஆன்லைன் எழுத்து தேர்வு நடத்தப்பட்டு அதற்கு பின்னரே உடல்தகுதி தேர்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.



Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்