டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ஏபிவிபி வெற்றி

வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (20:13 IST)
நேற்றைய வாக்கு எண்ணிக்கையின் போது பலமுறை மின்னணு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்ட உடனுக்குடன் சரிசெய்யப்பட்டாமல் இருந்தது.ஆயினும் இரண்டு முறை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. மாலை 6 க்கு மீண்டும் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

கடந்த 12ஆம் தேதி டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் அமைக்கப்பட்ட 52 வாக்குப் பதிவு மையங்களில் மாணவர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பெற்ற மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கம் (என்எஸ்யுஐ), பாஜகவின் ஆதரவு பெற்ற அகில பாரதீய வித்தியார்த்தி பரிஷத் (ஏபிவிபி), ஆம் ஆத்மி கட்சியின் மாணவர் அமைப்பான சத்ரா யுவா சங்கர்ஷ் சமிதி (சிஒய்எஸ்எஸ்), இடதுசாரி மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர் சங்கம் (ஏஐஎஸ்ஏ) உள்ளிட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் தேர்தலில் போட்டியிட்டன.

நேற்றைய வாக்கு எண்ணிக்கையின் போது பலமுறை மின்னணு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட அது உடனுக்குடன் சரிசெய்யப்பட்டாமல் இருந்தது. ஆயினும் இரண்டு முறை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. மாலை 6 க்கு மீண்டும் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. அப்போது ஏபிவிபி ன் சார்பாக போட்டியிட்டவர்கள் தலைவர், துணைத் தலைவர் இணை செயலாளர் ஆகிய பதவிகளில் ஜெயித்ததாக அறிவிக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்