டிரைவிங் லைசென்ஸ் எடுக்கவும் ஆதார் கார்டு தேவை. அரசின் அதிரடி அறிவிப்பு

Webdunia
திங்கள், 27 மார்ச் 2017 (00:08 IST)
இந்தியர்கள் அனைவருக்கும் அத்தியாவசமானது என்ற நிலைக்கு வந்துவிட்டது ஆதார் கார்டு. போகிற போக்கை பார்த்தால் தெருவில் நடந்து செல்லக்கூட ஆதார் கார்டு தேவை என்ற நிலை ஏற்பட்டுவிடும்போல் தெரிகிறது.




 


சமீபத்தில் பான்கார்டு, புதிய சிம் வாங்க ஆதார் கார்டு தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது டிரைவிங் லைசென்ஸ் எடுக்க வேண்டும் என்றாலும் ஆதார் கார்டு தேவை என்று புதியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவிங் லைசென்ஸ் உடன் ஆதார் கார்டை இணைத்தால் போலி ஓட்டுனர் உரிமம் தடுக்கப்படும் என்றும், விபத்து நடந்தால் குற்றவாளிகள் அல்லது விபத்தால் பாதிக்கப்படுபவர்கள் எளிதில் அடையாளம் காண ஏதுவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவிங் லைசென்ஸ் எடுக்க மட்டுமின்றி ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்கவும் ஆதார் கார்டு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்