தலைவரின் டார்ச்சர் - சட்டசபையில் கதறி அழுத பாஜக பெண் எம்.எல்.ஏ

புதன், 27 ஜூன் 2018 (11:21 IST)
மத்திய பிரதேசத்தில் முக்கிய தலைவரின் டார்ச்சரால் பாஜக பெண் எம்.எல்.ஏ ஒருவர் சட்டசபையில் கதறி அழுத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் சிமாரியா தொகுதியை சேர்ந்தவர் அபய் மிஷ்ரா. இவர் அத்தொகுதிக்கு எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர் பாஜக கட்சியைச் சேர்ந்தவர். அபய் மிஷ்ராவிற்கு கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தினரையும் அவர் மிரட்டி வந்துள்ளார்.
 
இந்நிலையில் நேற்று அம்மாநில சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அபய் மிஷ்ரா திடீரென எழுந்து தனது கட்சியின் மூத்த தலைவர் தன்னை துன்புறுத்துவதாக கண்ணீர் மல்க கூறினார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குரல் கொடுத்தனர். எம்.எல்.ஏ விற்கே இந்த நிலைமை என்றால் நாட்டின் பொதுமக்களின் நிலை என்ன? என கேள்வி எழுப்பினர்.
 
பின்னர் அங்கிருந்தவர்கள் அபய் மிஷ்ராவிற்கு ஆறுதல் தெரிவித்தனர். அபய் மிஷ்ரா குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என உள்துறை அமைச்சர் தெரிவித்தார். ஆனால் அந்த தலைவர் யார் என்பது தெரியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்