ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகோல் எம்.எல்.ஏவான தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நிம்மல ராம நாயுடு, அப்பகுதியில் உள்ள சுடுகாட்டை புதுப்பிக்க அரசிடம் கோரிக்கை விடுத்தார். இதனையேற்று சுடுகாட்டை சீரமைக்க அரசு ரூபாய் 3 கோடி நிதி ஒதுக்கியது.
ஆனால் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத அந்த சுடுகாட்டை சீரமைக்க யாருமே டெண்டர் எடுக்க முன் வரவில்லை. கடைசியாக ஒருவர் டெண்டர் எடுத்து பணிகளை துவங்கினார். ஆனால் பணி துவங்கி சில நாட்களிலே அங்கு பேய், பிசாசு உலவுவதாக வந்த வதந்தியையடுத்து தொழிலாளர்கள் யாரும் பணி செய்ய முன்வரவில்லை.