கணவனை பழிதீர்க்க மனைவியை கொடூரமாக கற்பழித்த காமுகர்கள்

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (13:09 IST)
மேற்கு வங்கத்தில் நபர் ஒருவர் மீதான தனிப்பட்ட பகையில், அவரது மனைவியை காமுகர்கள் சிலர் கொடூரமாக கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மேற்கு வங்கம் மாநிலம் ஜல்பய்குரி மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர், தன் மனைவியுடன் வசித்து வந்தார். இவருக்கு அதே பகுதியில் வசித்து வந்த இரு நபர்களுடன் முன்பகை இருந்து வந்துள்ளது.
 
சமீபத்தில் அந்த நபர் வீட்டில் இல்லாததை அறிந்த அந்த இரண்டு நபர்கள், இந்தச் சூழலை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தனது எதிரியின் மனைவியை கொடூரமாக கற்பழித்துள்ளார்கள். கொடூரத்தின் உச்சமாய் அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை சொருகி விட்டு ஓடியுள்ளனர். அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இதுகுறித்து வழக்குப்பதிந்துள்ள போலீஸார், இந்த கொடூர செயலை செய்த 2 அயோக்கியன்களை கைது செய்துள்ளனர். அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்