டீச்சரை காதலித்த மாணவன்.. காதலை ஏற்காததால் துப்பாக்கிச்சூடு! – உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!

Prasanth Karthick

ஞாயிறு, 5 மே 2024 (11:02 IST)
உத்தரபிரதேசத்தில் காதலை ஏற்காத ஆசிரியை மீது மாணவன் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



உத்தர பிரதேசம் மாநிலத்தின் பிஜ்னோய் நகரில் தனியார் கோச்சிங் செண்டர் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. அதில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் 28 வயது இளம்பெண் கோமல். அந்த கோச்சிங் செண்டரில் 21 வயதான பிரசாந்த் குமார் என்ற இளைஞர் முன்பு படித்து வந்துள்ளார். அப்போது கோமலை பிரசாந்த் ஒருதலையாக காதலிக்கத் தொடங்கியுள்ளார்.

ALSO READ: 35 வயசாகியும் பொண்ணு கிடைக்கல.. சண்டை போட்ட மகனை அடித்துக் கொன்ற தாய், பெரியம்மா! – திருவண்ணாமலையில் அதிர்ச்சி சம்பவம்!

இதை கோமலிடம் சொன்னபோது அந்த காதலை ஏற்க கோமல் மறுத்துவிட்டார், ஆனாலும் கோமலை காதலிக்க வைக்க தொடர்ந்து பிரசாந்த் முயன்று வந்துள்ளார். ஆனால் கோமல் பிடிகொடுக்காத நிலையில் ஆத்திரமடைந்த பிரசாந்த் கோமலை கோச்சிங் செண்டரில் வைத்து திடீரென துப்பாகியால் சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கோமல் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் பிரசாந்த் குமாரை கைது செய்துள்ளனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்