திருமணத்திற்கு பிறகும் தீராத தொல்லை.. ஆசைக்கு இணங்க அழைத்த முன்னாள் காதலனை போட்டுத்தள்ளிய இளம்பெண்!

Prasanth Karthick

வியாழன், 25 ஏப்ரல் 2024 (11:30 IST)
கர்நாடகாவில் திருமணத்திற்கு பிறகும் தொல்லை செய்து வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஆள் வைத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள பாலகனூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் மாருதி. டிரைவராக வேலைபார்க்கும் இவருக்கும் புஷ்பவதி என்ற இளம்பெண்ணுக்கும் சமீபத்தில்தான் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு முன்பு புஷ்பவதிக்கு காதர் பாட்ஷா என்கிற பஸ் டிரைவர் ஒருவருடன் காதல் இருந்து வந்துள்ளது.

காதர் பாட்ஷா திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளவர். அப்படியிருந்தபோதும் காதர் பாட்ஷாவை அடிக்கடி தனிமையில் சந்தித்து அவருடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார் புஷ்பவதி. அதற்கு பின்னர் மாருதியுடன் திருமணமாகி விடவே காதர் பாட்ஷாவுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டதுடன் செல்போன் எண்ணையும் மாற்றியுள்ளார். இந்நிலையில் சில காலம் கழித்து எப்படியோ புஷ்பவதியின் புதிய மொபைல் எண்ணை தெரிந்து கொண்ட காதர்பாட்ஷா அடிக்கடி அவருக்கு மெசேஜ் அனுப்பியும், போன் செய்தும் தொல்லை செய்து வந்துள்ளார். இதை புஷ்பவதி தனது கணவர் மாருதியிடம் சொன்ன நிலையில், மாருதியும் காதர்பாட்ஷாவை எச்சரித்துள்ளார்.

ஆனாலும் காதர்பாட்ஷா புஷ்பவதிக்கு மெசேஜ் அனுப்புவதை நிறுத்தவில்லை. இதனால் கடுப்பான மாருதி தனது நண்பர்கள் மூவரை அழைத்துக் கொண்டு சென்று காதர்பாட்ஷாவை மூர்க்கமாக தாக்கியுள்ளார். இதில் காதர்பாட்ஷா கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து மாருதி நேராக சென்று காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் மாருதியின் நண்பர்களையும், மனைவி புஷ்பவதியையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்