மீண்டும் கிராமங்களை நோக்கி மருத்துவர் அய்யா பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸ், செயல் தலைவர் அன்புமணி இடையே உட்கட்சி உரசல் ஒரு பக்கமிருக்க, சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சார பணிகளும் வேகமெடுத்து வருகின்றன. அந்த வகையில் ராமதாஸ் மீண்டும் கிராமங்களை நோக்கி மருத்துவர் அய்யா என்ற பிரச்சாரத்தை நேற்று தொடங்கினார்.
முதலாவதாக செங்கல்பட்டு சூனாம்பேட்டில் கூட்டத்தில் பேசிய அவர் “நீங்கள் நல்லா குடியுங்கள். அரசாங்கம் அதை வைத்துதான் ஆயிரம் ரூபாய் கொடுக்க முடியும் என சொல்கிறது. ஆனால் நாங்கள் ஒரு சொட்டு மதுக்கூட இருக்கக் கூடாது என பேசிவருகிறோம். இன்றைய தலைமுறை கஞ்சாவுக்கு அடிமையாகிறது. அதிலிருந்து மீள்வது கஷ்டம்.
எல்லாரும் குடிங்க, குடிங்க என அவர்கள் சொல்லும்போது, படிங்க படிங்க என இந்த ராமதாஸ் சொல்கிறேன். நான் நினைத்திருந்தால் குடியரசு தலைவர் பதவிக்கே கூட போயிருக்க முடியும். பிரதமர் மோடி இப்போது வந்தாலும் என்னை கட்டியணைத்து பேசுகிறார். ஆனால் என் வாழ்நாள் முழுவதும் எந்த பதவிக்கும் போக மாட்டேன் என சத்தியம் செய்து மற்றவர்களை எல்லாம் பெரிய பதவிகளுக்கு அனுப்பி அழகு பார்த்துள்ளேன்” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K