ஓரினசேர்க்கைக்கு அழைத்து பணம் பறித்த சிறுவர் கும்பல்! திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்!

Prasanth Karthick

ஞாயிறு, 21 ஜனவரி 2024 (09:55 IST)
திருப்பூரில் இளைஞர் ஒருவரை செல்போன் செயலி மூலம் ஓரின சேர்க்கைக்கு அழைத்து வழிப்பறி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜல்லிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 31 வயதான ராஜ்குமார். இவருக்கு கடந்த ஆண்டில் திருமணம் ஆன நிலையில் கர்ப்பமாக இருந்த அவரது மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் ராஜ்குமார் ஒரு செயலி மூலம் ஓரின சேர்க்கை விருப்பமுடையவர்களை தேடியபோது திருப்பூரை சேர்ந்த வேறு ஒரு வாலிபர் இவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ALSO READ: இந்திய விமானத்தை பயன்படுத்தக்கூடாது.. அதிபர் போட்ட உத்தரவால் பலியான சிறுவன்?

இதனால் அந்த நபர் சொன்ன இடத்திற்கு ராஜ்குமார் சென்றபோது அங்கு அவரை சூழ்ந்து கொண்ட 5 பேர் ராஜ்குமாரை தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த 17 வயது சிறுவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர்கள்தான் ராஜ்குமாரை ஓரின சேர்க்கைக்கு அழைத்து வழிப்பறி செய்தது என தெரிய வந்துள்ளது. சிறுவர்களின் இந்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 17 வயது நிரம்பாதவர்கள் இதுபோன்ற ஆபாச செயலிகளை பயன்படுத்துவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்