காதலனை அடித்து துவம்சம் செய்து திருமணம் செய்த இளம்பெண்

Webdunia
வியாழன், 1 பிப்ரவரி 2018 (22:15 IST)
ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகர், திவ்யா ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் இருவருக்கும் ஐதராபாத்தில் பணி கிடைத்ததால் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் விடுமுறைக்கு ஊருக்கு செல்வதாக கூறிய சந்திரசேகர், பெற்றோரின் கட்டயாத்தின் பேரில் வேறு பெண்ணை திருமணம் செய்ய சம்மதித்துள்ளார். இதனை அறிந்து ஆத்திரமடைந்த திவ்யா, தனது உறவினர்களுடன் சென்று சந்திரசேகரரையும், அவருடைய உறவினர்களையும் சரமாரியாக செருப்பால் அடித்துள்ளார். ஒருகட்டத்தில் அடி தாங்கமுடியாத சந்திரசேகர், கண்ணீருடன் திவ்யாவை திருமணம் செய்ய சம்மதித்துள்ளார்.

பின்னர் இருவீட்டாரின் முன்னிலையில் அந்த பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் திவ்யாவுக்கு சந்திரசேகர் தாலி கட்டினார். சந்திரசேகரை திவ்யா அடித்து துவம்சம் செய்த வீடியோ காட்சி இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்