மருத்துவமனைக்குள் புகுந்து இளம்பெண்ணை கொலை செய்த இளைஞர்: அதிர்ச்சி வாக்குமூலம்..!

Webdunia
ஞாயிறு, 16 ஜூலை 2023 (10:16 IST)
கேரளாவில் மருத்துவமனைக்குள் புகுந்து இளம்பெண்ணை கத்தியால் 12 முறை சரமாரியாக குத்தி கொலை செய்த சம்பவத்தில் கைதானவர் கொடுத்த வாக்குமூலம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே அங்கமாலி என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் லிஜி என்ற பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் அவரை மகேஷ் என்ற வாலிபர் லிஜி உயிரிழக்கும் வரை 12 முறை கத்தியால் குத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 
பள்ளிப்பருவம் முதல் இருவரும் பழகி வந்த நிலையில், வேறொருவரை லிஜி திருமணம் செய்து, தன்னுடன் பேசுவதை நிறுத்தியதால் கொலை செய்ததாக மகேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
மேலும் கத்தியால் குத்த முயன்ற போது, தப்பியோடியதால் துரத்தி சென்று 12 முறை குத்தியதாக மகேஷ் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்