சபரிமலையில் ஆந்திர பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2023 (20:50 IST)
கேரளாவில் சாமி தரிசனம் முடித்துவிட்டு,  ஆந்திர பக்தர்கள்  சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த 30 பக்தர்கள்    நேற்று தரிசனத்திற்காக  பேருந்து ஒன்றில் சபரிமலை வந்தனர்.

கோயிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு, அவர்கள் அனைவரும் இன்று அதிகாலையில் ஊருக்குப் புறப்பட்டனர்.

அப்போது,  நிலக்கல் அருகே லாகா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது பஸ் திடீரென்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து அறிந்த போலீஸாரும் அப்பகுதி மக்களும் சம்பவ இடத்திற்குச் சென்று  காயமடைந்த சிறுமி உள்ளிட 7 பேரை மீட்டு அருகில் உள்ள  மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்