வரதட்சணை கொடுக்காததால் புதுமனைவியை நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்த கணவன்
செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (11:58 IST)
அசாமில் வரதட்சணை கொடுக்காததால் கணவன் தன் புதுமனைவியை நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளுக்குநாள் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நம் நாட்டில் அதிகரித்துக் கொண்டே போகிறது.
அசாமில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஒரு ஜோடியினருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகும் பெண்வீட்டார் பேசிய படி வரதட்சணை கொடுக்காததால் ஆத்திரத்தில் இருந்துள்ளார் புதுப்பெண்ணின் கணவர்.
இதனையடுத்து தனது 2 நண்பர்களுடன் வீட்டிற்கு சென்ற கணவன், தனது மனைவியடம் தகராறு செய்துள்ளான். ஒரு கட்டத்தில் அவன் 2 நண்பர்களோடு சேர்ந்து தனது புது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இதனை தாங்கிக் கொள்ள முடியாத மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் பெண்ணின் கணவர் மற்றும் அவரது 2 நண்பர்களை கைது செய்த போலீஸார் அவர்களை சிறையில் அடைத்தனர்.