இறந்த பெண்களுடன் உடலுறவு; பல கொலைகள்: கொடூர மனிதன் கைது

Webdunia
திங்கள், 5 செப்டம்பர் 2016 (22:59 IST)
பெங்களூருவில் 40 வயதான கிருஷ்ணமூர்த்தி என்பவர், பெண்களை கொலை செய்து அந்த இறந்த உடலுடன் உறவுகொண்ட சம்பவம் நடந்துள்ளது. இவருக்கு பல கொலைகளில் தொடர்பிருப்பதாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


 
 
பெங்களூருவில் தொடர் கொலை மற்றும் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்த 40 வயதான கிருஷ்ணமூர்த்தி எனும் கிருஷ்ணையாவை காவல்துறையினர் கைது செய்தனர். இவரை 50 வயது பெண் ஒருவரின் கொலையில் சந்தேகத்தின் பெயரில் காவல்துறையினர் இவரை கைது செய்தனர்.
 
பின்னர் கிருஷ்ணையாவிடம் நடந்த விசாரணையில் 16 வயது பெண் உட்பட 4 பெண்களின் கொலையில் இவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. இரண்டு கொலையில் இவருக்கு தொடர்பிருப்பது நிரூப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள இரண்டு கொலைகளுக்கான ஆதாரங்களை போலிசார் சேகரித்து வருகின்றனர்.
 
கொலை செய்த பெண்களின் பிணத்துடன் கிருஷ்ணையா உடலுறவு வைத்து கொண்ட அதிர்ச்சி தகவலும் இந்த விசாரணையின்போது தெரியவந்துள்ளது. அந்த பகுதியில் காணமல் போன பெண்களை பற்றி விசாரித்து, வேறு ஏதேனும் கொலைகள் நடைபெற்றுள்ளதா என விசாரித்து வருவதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்