மூடநம்பிக்கை...9 வயது சிறுவன் நரபலி: ஒடிசாவில் கொடூரம்

Webdunia
ஞாயிறு, 21 அக்டோபர் 2018 (13:21 IST)
ஒடிசாவில் பணத்தாசையால் 9 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒடிசா மாநிலம் போலாங்கிர் மாவட்டத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் ஒருவன் சமீபத்தில் காணாமல் போனான். அவனின் பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைத்தபாடில்லை.
 
இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் சிறுவனை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சிறுவன் ஒரு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டான்.
 
சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் சிறுவனின் தாய்மாமனை கைது செய்து விசாரித்தனர். சிறுவனை நரபலி கொடுத்தால் நிறைய பணம் கிடைக்கும் என்பதால் அவனை நரபலி கொடுத்ததாக சிறுவனின் தாய்மாமன் அதிர்ச்சிகர வாக்குமூலத்தை அளித்துள்ளான். 
 
இதையடுத்து போலீஸார் அவனை கைது செய்தனர். மூட நம்பிக்கையால் அநியாயமாக, ஒரு சிறுவனின் உயிர் பறிபோன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்