சீன லேபில்தான் கொரோனா உற்பத்தி: குற்றச்சாட்டு கூறிய பெண்ணின் டுவிட்டர் அக்கவுண்ட் சஸ்பெண்ட்

வியாழன், 17 செப்டம்பர் 2020 (17:55 IST)
சீன லேபில்தான் கொரோனா உற்பத்தி
கொரோனா வைரஸின் பிறப்பிடம் சீனாதான் என்றும் சீனாதான் உலகம் முழுவதும் கொரோனா வைரஸை பரப்பியது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்த நிலையில் சீனர்கள் தான் கொரோனா வைரஸை தாங்களாகவே உற்பத்தி செய்தார்கள் என்ற தகவல் சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
சீனாவில் உள்ள லேப் ஒன்றில் தான் கொரோனா வைரஸ் உற்பத்தியானது என்று அந்த லேபின் ஆய்வாளர் டாக்டர் லி மெங் யான் என்பவர் சமீபத்தில் தனது டுவிட்டரில் கூறியிருந்தார். இந்த உண்மையை லி மெங் யான் தனது ட்விட்டர் கணக்கில் கூறியதை அடுத்து டுவிட்டரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இந்த நிலையில் தற்போது லி மெங் யான் அவர்களது டுவிட்டர் பக்கம் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. டுவிட்டர் விதிகளை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது 
 
முக்கிய நிகழ்வுகள் மற்றும் சம்பவங்கள் திசை திருப்பும் வகையில் செய்திகளை பரப்பினால் அவரது டுவிட்டர் கணக்குகள் சஸ்பெண்ட் செய்யப்படும் என்பது டுவிட்டர் விதிகளில் ஒன்றாகும். இந்த விதியின் படிதான் லி மெங் யான் டுவிட்டர் பக்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்