94 யூடியூப் சேனல்கள் முடக்கம் – மத்திய அரசு!

வெள்ளி, 22 ஜூலை 2022 (10:57 IST)
போலி செய்திகள் பரப்புவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது.


நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எந்த ஒரு உள்ளடக்கத்தையும் தடை செய்ய தகவல் தொழில்நுட்ப சட்டம் 2010ன்படி அனுமதி உள்ளது.

அந்த வகையில் 2021- 2022ல் போலி சித்திகளை பரப்பியதற்காக 94 யூடியூப் சேனல்கள், 19 சமூக ஊடக கணக்குகள், 747 இணையதள முகவரிகள் URL மூலம் முடக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அனுராக் தாக்கூர் குறிப்பிட்டுள்ளார்.

போலி செய்திகள் பரப்புவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்த பதில் அளித்தார். இதற்கு முன்னதாக நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு கருதி மொத்தம் 560 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டு இருப்பதாகவும் அதில் 78 செய்தி சேனல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்