4வது மாடியிலிருந்து தூக்கி வீசிய மகளை மீண்டும் வீசிய தாய்

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (16:41 IST)
பெங்களூரில் 9 வயது மகளை பெற்ற தாய் 4வது மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
பெங்களூர் ஜே.பி. நகரில் வசித்து வருபவர் சுவாதி சர்கர். இவருக்கு 9 வயதில் ஆசிகா சர்கர் என்ற மகள் உள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை சுவாதி தன்னுடைய மகள் ஆசிகாவை 4வது மாடியில் இருந்து தூக்கி வீசியுள்ளார். 
 
கீழே விழுந்த சிறுமி துடிதுடித்துக் கொண்டிருந்துள்ளர். இதைக்கண்ட சுவாதி மீண்டும் ஆசிகாவை 4வது மாடிக்கு இழுத்துச் சென்று தூக்கி விசியுள்ளார். இந்த முறை சிறுமியின் உயிர் பிரிந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சுவாதியை மின்கம்பத்தில் கட்டி வைத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 
 
இதையடுத்து காவல்துறையினர் சுவாதியை கைது செய்தனர். சுவாதி கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், பித்தம் பிடித்தது போல் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்