மின்னல் தாக்கி 9 பேர் பலி! – மத்திய பிரதேசத்தில் சோகம்!

Webdunia
ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (13:26 IST)
மத்திய பிரதேசத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.’

கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் அரபிக்கடலை ஒட்டிய மாநிலங்களில் கடும் கனமழை பெய்து வருகிறது. கேரளா, கர்நாடகா, கோவா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில் மின்னல் தாக்கி 9 பேர் பலியாகியுள்ளனர். விதிஷா மாவட்டத்தில் 4 பேரும், சாட்னா மாவட்டத்தில் 4 பேரும், குணா மாவட்டத்தில் ஒருவரும் என மொத்தம் 9 பேர் இறந்துள்ளனர்.

மின்னல் தாக்கி இரண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தில் அடுத்த சில தினங்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்