ஒரு கொலையை மறைக்க 9 கொலைகள்…கொடூரனுக்கு தூக்கு தண்டனை

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (16:49 IST)
தெலுங்கானா மாநிலத்தில் உள்ளா வாராங்கலில்  வசித்து வந்த சஞ்சய் குமார் யாதவ் என்பவன், தான் செய்த கொலையை மறைப்பதற்காக  9 பேரை அடுத்தடுத்து விஷம் வைத்துக் கொன்றான்.

பின்னர் அந்தச் சடலங்களைக் கிணற்றில் வீசி எறிந்து தடயத்தை மறைக்க முயன்று போலீஸில் சிக்கினான்.

இந்தச் சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்த வழக்கு தெலுங்கானாவில் உள்ள விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று கொலையாளி சஞ்சய் குமார் யாதவுக்கு விரைவு நீதிமன்றம் தூக்குத் தண்டனை அளித்து அதிரடி  தீர்ப்பளித்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்