குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மர்ம மரணம்: தற்கொலையா?

Webdunia
திங்கள், 20 ஜூன் 2022 (17:32 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்த இது தற்கொலையா?என காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 
 
மும்பை அருகே சாங்கி என்ற மாவட்டத்தில் இரண்டு வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். முதல் வீட்டில் 6 உடல்களும் இரண்டாவது வீட்டில் மூன்று உடல்களும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது
 
மரணமடைந்த உடல்களின் அருகே பூச்சிக்கொல்லி மருந்து இருப்பதை அடுத்து இது தற்கொலையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு இறப்புக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்
 
இறந்த குடும்பத்தினருக்கு அதிகமாக கடன் இருந்ததாகவும் கடன்காரர்கள் நெருக்கடி கொடுத்ததாகவும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்