கேரளாவில் உச்சம் தொட்ட கொரோனா! ஒரே நாளில் 8,830 பேருக்கு பாதிப்பு!

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (18:49 IST)
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் நமது அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது 
 
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஐயாயிரத்துக்கும் அதிகமாகவும் கடந்த வாரம் ஆறாயிரத்துக்கும் அதிகமாகவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்த நிலையில் இன்று கேரளாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சம் தொட்டது
 
இன்று ஒரே நாளில் 8,830 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மேலும் அம்மாநிலத்தில் 8,830 தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 67,061 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 46,263 பேர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை விட சிறிய மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்