இதில் 714 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளனர். அதிக பெயர்கள் இடம்பெற்றுள்ள நாடுகளில் இந்தியா 19வது இடத்தை பிடித்துள்ளது. விஜய் மல்லாயா, அமிதாப் பச்சன், நீரா ராடியா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா தத் உள்ளிட்ட இந்திய பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர்.
பெர்முடைவைச் சேர்ந்த ஆப்பிள்பே என்ற நிறுவனமும், சிங்கப்பூரைச் சேர்ந்த ஆசியாசிட்டி என்ற நிறுவனமும் 19 நாடுகளில் போலி நிறுவனங்கள் பெயர்களில் முதலீடுகள் செய்துள்ளது தெரியவந்துள்ளது. உலகமெங்கும் உள்ள பிரபல தொழிலதிபர்கள், பணக்காரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது கருப்பு பணத்தை இந்த நிறுவனங்கள் மூலம் போலி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.