பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 7 பேர் பலி...முதல்வர் இழப்பீடு அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 16 மே 2023 (20:52 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 7 பேர் பலியான விவகாரத்தில் முதல்வர் இழப்பீடு   அறிவித்துள்ளார்.

மேற்கு வங்கம் மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்குள்ள  கிழக்கு மித்னாபூர் மாவட்டம் ஈக்ரா  நகரில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் இன்று திடீர் வெடிவிபத்து ஏற்படது.

இவ்விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் உள்ளிட்ட 7 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது, ''வெடிவிபத்து சம்பவம் பற்றி அறிந்து வருத்தம் அடைந்தேன். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவ்விபத்து குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ளும்'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ''இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு ரூ. 2.5 லட்சம் இழப்பீடு வழங்கும். காயமடைந்த நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்