தேர்தலில் போட்டியிட அவசர அவசரமாக திருமணம் செய்த 62 வயது நபர்..!

Mahendran
வியாழன், 21 மார்ச் 2024 (15:09 IST)
62 வயது நபர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவசர அவசரமாக 46 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீகார் மாநிலத்தில் 62 வயது ஆயுள் தண்டனை கைதி ஒருவர் சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்க்கிறார். அவர் ஏற்கனவே  லாலு பிரசாத் யாதவ் நெருங்கிய நண்பர் என்றும் அவரது மனைவி ரப்ரிதேவி முதலமைச்சர் ஆக இருக்கும்போது பலமுறை அவர் வீட்டிற்கு சென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சிறை செல்லும் முன் அவருக்கு தேர்தலில் போட்டியிட லாலு பிரசாத் யாதவ் வாக்குறுதி அளித்ததாக தெரிகிறது. ஆனால் தற்போது அவர் சிறையில் இருப்பதால் போட்டியிட முடியாது என்பதால் தனக்கு கிடைத்த வாய்ப்பை தனது மனைவிக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி அவசர அவசரமாக அவர் 46 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்

இந்த நிலையில் அவரது மனைவிக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . காங்கிரஸ் எம்பி ஒருவரின் கொலை சம்பவம் உள்பட பல குற்றங்களில் ஈடுபட்டுள்ள இவரது மனைவி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட போவதாக விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் ஜனதாதள முக்கிய வேட்பாளர் ஒருவரை எதிர்த்து போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்