தமிழிசை எந்தத் தொகுதியில் நின்றாலும் டெபாசிட் கிடைக்காது: அமைச்சர் ரகுபதி

Mahendran

புதன், 20 மார்ச் 2024 (14:09 IST)
தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தல் அரசியலுக்கு வந்துள்ள நிலையில் அவர் வரும் மக்களவைத் தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் டெபாசிட் கூட வாங்க மாட்டார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர்கள் தெரிவித்துள்ளார்

இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ’தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழ்நாட்டில் எந்த தொகுதிகள் என்றாலும் அவர் டெபாசிட்டுக்கு போராட வேண்டும் என்று கூறினார்

தமிழ்நாடு ஆளுநர் கூட பிகாரில் சென்று போட்டியிடுவார் என்று செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது, அப்படி நடந்தால் அது மிகவும் நல்ல செய்தியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்

தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வரும் பிரதமர் மோடி எங்களுக்கு தூக்கம் இல்லை என்று கூறினார் ஆனால் நாங்கள் நிம்மதியாக ஓய்வு எடுத்துக் கொண்டு சிறப்பான தேர்தல் பணியை களத்தில் ஆற்றி வருகிறோம் என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்