ரயில்வேயில் 5,696 வேலைவாய்ப்புகள்! தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி?

Prasanth Karthick

வெள்ளி, 19 ஜனவரி 2024 (15:13 IST)
மத்திய அரசு துறையான ரயில்வேயில் 5,696 அசிஸ்டண்ட் லோகோ பைலட் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.



மத்திய அரசின் அதிக மனிதவளம் மிக்க துறைகளில் அஞ்சல் துறைக்கு நிகராக ரயில்வே துறையும் செயல்பட்டு வருகிறது. ரயில்வேயில் ஏராளமான பணிகளுக்கான வேலை வாய்ப்பு செய்திகள் அடிக்கடி வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ரயில்வேயில் 5,696 துணை லோகோ பைலட் (துணை ஓட்டுனர்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ALP (Assistant Loco Pilot) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.07.2024 நாளின்படி 18 வயதிலிருந்து 30 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். வயது வரம்பில் எஸ்.சி/எஸ்.டி – 5 ஆண்டுகள், ஓபிசி – 3 ஆண்டுகள் தளர்வுகள் உண்டு.

கல்வி தகுதியில் 10ம் வகுப்பு முடித்து ஐ.டி.ஐயில் மெக்கானிக், வயர்மேன், எலெக்ட்ரீசியன், ஃபிட்டர் என ஏதேனும் ஒரு பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சிக்கு பின் பொறியியலில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கான ஆட்கள் தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக எஸ்.சி/எஸ்.டி, மாற்றுப்பாலினத்தார் ரூ.250-ம், மற்றவர்கள் ரூ.500-ம் செலுத்த வேண்டும். மேலதிக விவரங்களுக்கு https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

இந்த பணிகளுக்கான விண்ணப்பங்களை நாளை ஜனவரி 20 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்